சென்னை: பிரபல கிறிஸ்தவ மத போதகரும், காருண்யா பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் டிஜிஎஸ் பால் தினகரன் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைச் சந்தித்து தேசியப் பிரச்சினைகள் குறித்துப் பேசியுள்ளார். அகமதாபாத் அருகே காந்தி நகரில் உள்ள மோடியின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்தா பால் தினகரன், தேசியப் பிரச்சினைகள்
குறித்துப் பேசியதாக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. மேலும் மோடியின்
நலனுக்காகவும், குஜராத் மக்களுக்காகவும் சிறப்புப் பிரார்த்தனையையும் செய்தார்
பால் தினகரன்.இந்த சந்திப்பின்போது கல்வி, ஆன்மீகம், சமூக சேவை ஆகியவற்றில் பால் தினகரன் ஆற்றி வரும் சீரிய பணிகளைப் பாராட்டினார்.
No comments:
Post a Comment