Friday, 10 August 2012

விடுதி மாணவர்களுடன் ஓர் சந்திப்பு

விடுதி மாணவர்களுடன்
ஓர் சந்திப்பு

விடுதி மாணவர்களுடன் ஓர் சந்திப்பு. கிறிஸ்துவுக்காக வாலிபரை செயல்பட, அவர்களை அர்ப்பணிக்கச் செய்ய ஜுலை 29 அன்று போப் நினைவு மேல் நிலைப் பள்ளியின் சிற்றாலயத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை சிறப்புக் கூடுகை நடத்தப்பட்டது. போப் பள்ளியின் ஆசிரியர் திரு.மதுரம் பாக்கியராஜ் தொடக்க ஜெபம் செய்ய, பாடல்கள், குறு நாடகங்கள் என உற்சாகமாக விறுவிறுப்படைந்தது நிகழ்ச்சி, அத்துடன் கிறிஸ்துவின் செய்தியும் மாணவர்களைச் சென்றடைந்ததுளூ 'பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள், ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்' (1யோவா 4:4) என்ற விதை மாணவர்கள் மனதில் விழுந்தது. சுமார் 120 பள்ளி மாணவர்கள் இக்கூடுகையில் பங்கேற்றனர். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

Friends Prayer Fellowship

No comments:

Post a Comment